நடிகர் கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
தனது ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருபவர். தமிழில் பூஜை, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக அவரது நடிப்பில் பெஸ்ட் செல்லர் இணையத் தொடர் அமேஸானில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் திறந்த புத்தகமாகவே வைத்து வருபவர். எதையும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக தெரிவிப்பவர்.
தனது காதலர் குறித்தும் முன்பே அறிவித்துவிட்டார். இந்நிலையில், அவருடன் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ரீலில் பதிவேற்றியுள்ளார்.
அதில், தனது காதலருக்கு அருகே செல்லும்போது அவர் முகம் சுளிக்கிறார். அத்துடன் வீடியோ முடிகிறது.
வீடியோ எடுக்கும்போது எரிச்சலையும் பார்ட்னர் என்று குறிப்பிட்டு உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
முன்னதாக, நடிகை மந்த்ரா பேடி நடத்திய நிகழ்ச்சியொன்றில் ஓவியர் ஷாந்தனுவை காதலிப்பதை ஸ்ருதி தெரிவித்தார். இருவரும் ஆன்லைனில் சாட் செய்தோம். இருவருடைய எண்ணமும் ஒத்துப்போனதால் காதலிக்கிறோம் என்றார்.
எனக்கு தென்னிந்திய திரைப்படத் துறைகள் மிகவும் பிடித்திருக்கிறது. அங்கு தான் எனக்கான சிறந்த கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. இந்தி திரையுலகில் ஜெயிக்க உத்திகள் தேவை. வெல்கம் பேக், டி டே ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.
துல்கர் சல்மானுக்கு ஜோடியான ஷிவாங்கி… இது ஓவரா தெரியல…? விமர்சிக்கும் நெட்டிசனகள்
இவை இந்தி திரையுலகில் நல்ல வரவேற்பை எனக்கு பெற்று கொடுத்தது என்று செய்தியாளர் கண்ட பேட்டிக்கு ஸ்ருதி பதிலளித்தார். நடிகர் பிரபாஸுடன் சலார் படத்தில் ஸ்ருதி நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.