லடாக்கின் அசல் எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் இந்தியா-சீனா படைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காண இருதரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான 15வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏதுமில்லை என்ற போதும் பேச்சுவார்த்தையைத் தொடர இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
இது குறித்த கூட்டறிக்கை ஒன்று நேற்று வெளியானது. இதில் இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை எட்டும் வரை பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் சில பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் சுமார் 50 அல்லது 60 ஆயிரம் வீரர்களை ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்துள்ளதால் எல்லையின் பதற்ற நிலை இன்னும் தணியாமல் உள்ளது.