எள் பயிரிட்டு லாபம் பெறுங்கள் என தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நெல் அறுவடைக்கு பின்னர் மாசி பட்டத்தில் ‘எள்’ பயிரிட்டு லாபம் பெறலாம் என விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,
வேளாண் துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பயிரிடப்படும் எண்ணெய் வித்துக்களில், எள் பயிர் இரண்டாவது முக்கியப் பயிராக உள்ளது. நெல் பயிரை முப்போகம் சாகுபடி செய்வதால், மண் வளம் பாதிக்கப்படுவதோடு, தண்ணீர் தேவை அதிகரிக்கிறது.
நெல் அறுவடைக்குப் பின், எஞ்சியுள்ள ஈரத்தையும், கோடை பருவ மழையையும் முழுமையாக பயன்படுத்தி, மாசி பட்டத்தில் எள் பயிரை சாகுபடி செய்யலாம். மிகக் குறுகிய காலமான 80 முதல் 85 நாட்களில், ஒரு ஏக்கருக்கு 250 கிலோ மகசூல் தரும். எள் பயிரிட குறைந்த அளவு நீர் போதும். எள்ளுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் பெறலாம்.
எனவே, விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின், எள் பயிரை மாசி பட்டத்தில் பயிரிட்டு, குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் பெறவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.