இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல புரட்சிகரமான படங்களை இயக்கி புரட்சி இயக்குனர் என பெயரெடுத்தார்.
ரஜினிகாந்த்
,
விஜயகாந்த்
,
சத்யராஜ்
போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். சமீபத்தில் சிம்புவுடன் இவர் நடித்த மாநாடு படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஒரு யுட்யூப் சானலை துவங்கியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய ஆரி..மேடையிலேயே திட்டி தீர்த்தார் ..!
அந்த சானலில் தன் வாழ்க்கை அனுபவங்களை பற்றியும், தான் சினிமா துறையில் சந்தித்த அனுபவங்களைப்பற்றியும் பகிர்ந்து வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் அவர் தன் குடும்பத்தை பற்றியும் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியது, எனக்கு
விஜய்
மற்றும் வித்யா என இரு குழந்தைகள். விஜய்யின் தங்கையான வித்யா சிறுவயதில் மிக சூட்டிகையாக இருப்பார். என்னையும் என் மனைவியையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்.
மேலும் விஜய்யை கூட டேய் அண்ணா என்று செல்லமாக தான் அழைப்பார். அவர் பிரிந்தது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் ஆண்டவன் எனக்கு இரு குழந்தைகளை கொடுத்து அதில் ஒரு குழந்தையை அழைத்துக்கொண்டாரே என பல நாட்கள் வேதனைப்பட்டுள்ளேன்.
ஆனால் என் மகன் விஜய்யின் மூலமாக அவரது ரசிகர்களான நீங்களும் எனக்கு குழந்தைகள்தான். எனவே தற்போது எனக்கு பல குழந்தைகள் உள்ளன என விஜய்யின் ரசிகர்களை தன் குழந்தை என குறிப்பிட்டு கூறினார். தற்போது இவரின் வீடியோ விஜய் ரசிகர்களிடையே செம வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.
Vijay Carக்கு Insurance இருக்கு.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி