தெலுங்கானா சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அம்மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சரும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி. ராமா ராவ் பதிலளித்தார்.
அப்போது, மூலோபாய நல மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கேடிஆர் விளக்கமளித்தார். மேலும், அவர் கூறியதாவது:-
ராணுவம் விரும்பும்போதெல்லாம் சாலைகளை மூடுவது நியாயமில்லை. அதனால், ராணுவ அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் தண்ணீர் மற்றும் மின்சாரம் விநியோகத்தை நாங்கள் துண்டிப்போம்.
ஐதராபாத்தில் உள்ள செகந்திரபாத் கிளப்பை ஒட்டியுள்ள சாலையான சஃபில்குடா, கண்டோன்மென்ட் பகுதியில் வசிப்பவர்களுக்கு சாலை மூடல் போன்ற கட்டுப்பாடுகள் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சியான பாஜக, அமைச்சர் ராணுவத்தை அச்சுறுத்துவதாகவும், ஹைதராபாத்தில் இருந்து ராணுவத் தளத்தை அகற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்.வி.சுபாஷ் கூறுகையில், “தெலுங்கானா அமைச்சர் கே.டி.ஆரின் கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் நன்று படித்தவர். நமது இந்திய ராணுவத்தின் மீது அவருக்கு மரியாதை இல்லை. ராணுவத்தை அவர்கள் பெ்படி நடத்துகிறார்கள் என்பதில் தொலுங்கானா அரசின் நிலைப்பாட்டை இது காட்டுகிறது.
மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிப்போம் என்று ராணுவ அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர். ஐதராபாத்தில் இருந்து ராணுவ தளத்தை அகற்ற முயற்சிக்கிறார்களா ?
இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது அனைவருக்கும் ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. அந்தமான் நிகோபாரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்