திருவனந்தபுரம் : ”அரசு பணியில் இருக்கும் ஒரு பிரிவினர், ‘ஒயிட்
காலர்’ பிச்சைக்காரர்கள் போல் இழிவாக நடந்து கொள்கின்றனர்,” என, கேரள
அமைச்சர் கோவிந்தன் கூறி உள்ளார்.
அவமானம்
கேரளாவில்,
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்,
இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில உள்ளாட்சி மற்றும் கலால்
துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில்
நேற்று பங்கேற்று பேசியதாவது:
சமுதாயத்திற்கு அவமானம் ஏற்படுத்தும்
வகையில், இழிவான நபர்களின் ஒரு குழு அரசுப் பணியில் இருக்கிறது. இவர்கள்,
‘ஒயிட் காலர்’ பிச்சைக்காரர்களை போல் நடந்து கொள்கின்றனர். இவர்களிடம்
தீர்வு கேட்டு வரும் மனுக்களில், மக்களை அலைய வைக்கும் வகையில் குறிப்புகள்
எழுத வேண்டாம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அலட்சியம்
அரசு
ஊழியர்களின் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளை கண்டிப்பது, மார்க்சிஸ்ட் கம்யூ.,
மூத்த தலைவரான அமைச்சர் கோவிந்தனின் வழக்கம். கடந்த டிசம்பரில் நடந்த அரசு
ஊழியர்கள் கூட்டத்தில் கோவிந்தன் பங்கேற்றார். அப்போது, அரசு ஊழியர்கள்
மக்களிடம் காட்டும் அலட்சியம், அதிகார மமதையை கடுமையாக கண்டித்தார்.
Advertisement