ஓடும் ரயிலில் தவறி விழுந்த| Dinamalar

விஜயநகரா : ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளம்பெண், வாலிபர் என இரண்டு பேர் உயிரிழந்தனர்.விஜயநகராவின் ஹொஸ்பேட் அருகே உள்ள கொடகினாள் இடத்தில் நேற்று மதியம் தண்டவாளம் ஓரம் வாலிபர், இளம்பெண் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.பல்லாரி ரயில்வே போலீசார் விசாரித்தனர்.பல்லாரியில் இருந்து ஹுப்பள்ளியை நோக்கி பயணியர் ரயில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் படிக்கட்டில் இருவரும் உட்கார்ந்து

இருந்தபோது, கதவு திடீரென மூடியதில் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.இவர்களுக்கு 20 அல்லது 21 வயதிருக்கலாம் என கருதப்படுகிறது. இருவரது மொபைல் போன்கள் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருப்பதால் பெயர், விலாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.