செஞ்சி : செஞ்சி வார சந்தையில் கட்டணத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டாக கலெக்டர், செஞ்சி தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் அளித்துள்ள மனு:செஞ்சி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், கால்நடைகளை செஞ்சி வார சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
தற்காக அதிகமாக சுங்கவரி வசூலிக்கின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஏற்கனவே, நஷ்டத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மக்களுக்கு சேவை செய்து வரும் எங்களிடம் விளை பொருட்களுக்கும், கால் நடைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.எனவே சிறு, குறு விவசாய அட்டை வைத்துள்ள விவசாயிகளிடம் வார சந்தையில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
செஞ்சி : செஞ்சி வார சந்தையில் கட்டணத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டாக கலெக்டர், செஞ்சி தாசில்தார்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.