கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா பேசியதாவது:
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் தாக்கம் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிரொலிக்கும். 135 முதல் 140 தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க கர்நாடக மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே சித்தராமையா போன் றோர் மீண்டும் முதல்வர் ஆகலாம்என கனவு காண கூடாது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்வது கனவிலும் நடக்காது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுகையில், “பஞ்சாபில்அடைந்த தோல்வியை பாஜகவினர் மறந்துவிடக் கூடாது. மக்களை பிளவுபடுத்தும் பாஜக அரசியலை அப்புறப்படுத்த மக்கள் விரும்புகின்றனர்’’ என்று கூறினார்.