பெங்களூருவை சேர்ந்த சி.எம்.இப்ராஹிம் 1967-ல் ஜனதா பரிவாரில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1978-ல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர், 2 ஆண்டுகளுக்கு பிறகு காங் கிரஸில் இணைந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்த போது சுற்றுலா, விமானத் துறை அமைச்சராக இருந்தார்.
அதிருப்தி
கர்நாடக மேலவை உறுப் பினராக இருக்கும் இப்ராஹிம் மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு கட்சி மேலிடத்திடம் கோரினார்.இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் மேலிடம் மேலவை எதிர்க்கட்சி தலைவராக பி.கே.ஹரிபிரசாத்தை நியமித்தது.இதனால் இப்ராஹிம் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில் இப்ராஹிம் நேற்று காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இப்ராஹிம் கூறுகையில், “கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். என்னை அவமதித்ததற்காககாங்கிரஸ் கடும் விளைவுகளைசந்திக்கும்’’ என்றார். இந்நிலையில் மஜத.வில் இப்ராஹிம் இணைய விருப்பதாக செய்திகள்வெளியாகியுள்ளன.