வெட கரண அபே விருவா (வேலை செய்யும் எம் வீரன்) என்ற பாடலில் அது உண்மையாகவே
வேலை செய்யும் எம் வீரனா ? அல்லது விலை உயர்த்தும் வீரன் என்று உள்ளதா என்ற
ஒரு சந்தேகம் எமக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”1948 இந்த சுதந்திரத்தின் பின்னர்,இவ்வாறானதொரு காலத்தை, இவ்வாறு
தோல்வியடைந்த ஒரு அரசாங்கத்தை நாம் பார்த்ததேயில்லை! 2014 இல் மகிந்த ராஜபக்ச
தோல்வியடைந்ததைப் பார்த்தோம், அவர் தோல்வியடைந்ததும் 2019 இல் கோட்டாபய
ராஜபக்சவை அழைத்துவந்தார்கள். ஒரு வருஷம் செல்வதற்குள் அவரும்
தோல்வியடைந்தார்.
அவரும் தோல்வியடைந்ததன் பின்னர் இவர்கள் 7 மூளைக்காரரை
அரசியலமைப்பையும் மாற்றி 20 ஆம் அரசியலமைப்பின் ஊடக அழைத்துவந்தார்கள், தற்போது
நாட்டில் 3 மூளையும் தோல்வியடைந்து விட்டது. 7 மூளையும் தோல்வியடைந்தது,
ராஜபக்சவின் அனைத்துமே தோல்வியடைந்துவிட்டது.
தற்போது நாட்டில் என்ன நடந்துள்ளது?
இன்று ஞாயிரு நாள் ,நாளை திங்கட்கிழமை வேலைக்குச் செல்லவேண்டும், எரிபொருள்
உள்ளதா , எரிவாயு உள்ளதா? மின்சாரம் உள்ளதா? நீர் உள்ளதா? உன்ன உணவு உள்ளதா?
மருந்து உள்ளதா? என்று நாட்டிற்கு ஒரு நம்பிக்கையில்லை.
பிள்ளைகளுக்கு நாளை பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.
பாடசாலை கட்டணங்கள்
உயர்ந்துள்ளது. சாப்பாடு பார்சல் விலை உயர்ந்துள்ளது,
பாணின் விலை உயர்ந்துள்ளது. நாட்டில் அனைத்துமே விலை உயர்ந்துவிட்டது.
வெட கரண அபே விருவா (வேலை செய்யும் எம் வீரன்) என்ற பாடலில் அது உண்மையாகவே
வேலை செய்யும் எம் வீரனா?
அல்லது விலை உயர்த்தும் வீரன் என்று உள்ளதா என்ற
ஒரு சந்தேகம் எமக்கு உள்ளது! இதை பற்றி இந்த பாடலை பாடிய பாத்திய சந்துஷ் இடம்
தான் கேட்க வேண்டும்!
அதோடு முக்கியமான ஒரு விடயத்தையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்,
எதிர்வரும் 15 ஆம் திகதி மாலை 2 மணிக்கு நாம் அனைவரும் வீதிக்கு
இறங்குகின்றோம்!
கொழும்பிற்குப் பேரணியாக வருகின்றோம்.
திரும்பிச்செல்வதற்க்கு நாம் வரவில்லை
மாறாக ஜனாதிபதிக்கு ஒரு விடயத்தைக் கூறி செல்லவே வருகின்றோம் என்பதையும்
நினைவுபடுத்திக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.