கோவாவில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து பாஜக இன்னும் அறிவிக்காத நிலையில், விஸ்வஜித் ராணே ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கோவா சட்டமன்றத் தேர்தலில் நாற்பதில் இருபது தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிரவாதிக் கோமந்தக் கட்சி, சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
முதலமைச்சர் பிரமோத் சாவந்த், சங்குலிம் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள போதும் புதிய முதலமைச்சர் யார் என பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.