சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும்.
கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின் தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.