சிம்புவின் கொரோனா குமார் படம் நிறுத்தப்பட்டதா? இயக்குனர் விளக்கம்
கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் இருந்து சம்பள பிரச்சனை காரணமாக சிம்பு விலகி விட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை அப்படத்தின் இயக்குனர் கோகுல் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கொரோனா குமார் படத்தில் சிம்பு கலந்து கொள்வார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அதோடு கொரோனா குமார் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க, விஜய் சேதுபதியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்'' என்று புதிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இயக்குனர் கோகுல்.