சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் சூப் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை மீண்டும் சூப் போட பயன்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை – பழைய மகாபலிபுரசாலை, காரப்பாக்கம், நடை மேம்பாலம் அருகே, கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் சாலையோரத்தில் மாலை 5 முதல் இரவு வரை, தள்ளுவண்டியில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு சூப் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள், சூப் குடித்து விட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு செல்கின்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இந்த எலும்புத்துண்டுகளை ஆள் இல்லாத நேரம் பார்த்து சூப் கடைக்காரர் கீழே இருந்து எடுத்து தண்ணீரில் கழுவிவிட்டு மீண்டும் சூப் பாத்திரத்தில் போட்டு விற்பனை செய்கிறார்.
இந்த காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.