சேலத்தில் காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், கொண்டலாம்பட்டி அருகே மதுபோதையில் ஆட்டோ ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அவரது ஆட்டோவை மடக்கிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆட்டோவை பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
இதனால், அங்கிருந்து சிறிது தூரம் நடந்துசென்ற ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ், நடு சாலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து அலறி துடித்தார். அவரை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சந்தோஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 என்ற எண்ணை அழைத்து உரிய ஆலோசனைகளை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
