ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு மத்தியில் ரஷ்ய சப்ளையர்கள் மற்றும் வங்கியாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அங்கு நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் சப்ளை சங்கிலியில் தொடர்ந்து தாக்கம் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து நிலக்கரியினை இறக்குமதி செய்து வரும் டாடா நிறுவனம், தற்போது மாற்று சந்தையினை எதிர்பார்க்கிறது.
இரும்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரியின் தேவையானது ஏற்கனவே கடும் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டது. இது தற்போது தான் ஒரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது.
மாற்று சந்தை
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், அவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. இது இவ்விரு நாடுகளில் இருந்தும் செய்யப்படும் ஏற்றுமதியினையும் பாதித்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வாய்ப்பினை கொடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகள் 45 மில்லியன் டன் உலோக இறக்குமதிக்கான வெற்றிடத்தினை உருவாக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து தான் தற்போது டாடா ஸ்டீல் மாற்று சந்தையினை நாடத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி
டாடா ஸ்டீல் தனது நிலக்கரி தேவையில் 10 – 15% ரஷ்யாவிடம் இருந்தே பெறுகிறது. இதனால் ரஷ்யாவுக்கு பதிலாக தற்போது மாற்று வழியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் டாடா ஸ்டீலின் ஐரோப்பிய நடவடிக்கைகளுக்கு வட அமெரிக்காவிலிருந்து அதிகம் வாங்க வேண்டியுள்ளது. இந்தியா பெரும்பாலும் நிலக்கரியை ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்டீல் விலை ஸ்பாட் சந்தையில் 1000 யூரோவாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் ஏற்றுமதி
2022 – 23ம் நிதியாண்டில் டாடா ஸ்டீல் ஐரோப்பாவின் ஏற்றுமதியானது ஒரு மில்லியன் டன்னையும் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய செயல்பாடுகள் மூலம் மொத்த உற்பத்தியில் 15% ஏற்றுமதி செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிக்கலாம்
அதிலும் தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது, இந்த நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம். எனினும் இது மூலதன பொருட்கள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பானது நிறுவனத்தின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்த மோதலால் அடுத்த சில மாதங்களில் மோசமான நிலையை எட்டகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சங்கிலித் தொடராக அனைத்து துறைகளிலும் எதிரொலிக்க கூடும்.
ukraine – russia crisis! Tata steel expects alternative to Russian coal
ukraine – russia crisis! Tata steel expects alternative to Russian coal/டாடாவின் அதிரடி திட்டம்.. உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையால் திணறும் உலோகத் துறை..!