தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
பிரிவு முடிவை அறிவித்த கையோடு ஐஸ்வர்யா அவரின் காதல் பாடல் வீடியோவிலும்,
தனுஷ்
தன் படங்களிலும் பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில் மகன்கள் தங்களை மிஸ் பண்ணாமல் இருக்க ஒரு டீலிங்கிற்கு வந்திருக்கிறார்களாம். அதாவது சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும், சில நாட்கள் தனுஷுடனும் மகன்கள் இருக்கிறார்களாம். இருப்பினும் மகன்கள் நிரந்தரமாக ஐஸ்வர்யாவுடன் தான் இருப்பார்களாம்.
ரஜினிக்கு மருமகனாக ஆசைப்பட்டதே இல்ல: ஷாக் கொடுத்த தனுஷ்
மகன்களுக்காக தயவு செய்து மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று
ரஜினிகாந்த்
கூறி வருகிறார். ஆனால் அவரின் பேச்சை இந்த முறை கேட்க தனுஷும், ஐஸ்வர்யாவும் தயாராக இல்லையாம்.
தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு ஐஸ்வர்யா தொடர்ந்து தன் வேலை பற்றி மட்டுமே சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்.
மேலும் பேட்டிகளிலும் அவர் இதுவரை தனுஷ் பற்றியோ, பிரிவு பற்றியோ பேசவில்லை. இதற்கிடையே தனுஷின் கெரியரை காலி செய்ய லதா ரஜினிகாந்த் இரண்டு அஸ்திரங்களை பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.