டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் சோனியாகாந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை குறித்து விவாதிக்க செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
