மாத நாயக்கனஹள்ளி : தமிழகத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.தமிழகத்தை சேர்ந்தவர் ஜோசப். நகை வியாபாரி. இவரிடமிருந்து மஹாராஷ்டிராவை சேர்ந்த வியாபாரி, இரண்டே கால் கிலோ தங்கத்தை வாங்கி இருந்தார்.
இதற்காக அவர், ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இப்பணத்தை தார்வாடின் ஹுப்பள்ளிக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி ஜோசப்பிடம் கூறியிருந்தார்.இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஹுப்பள்ளிக்கு காரில் சென்ற அவர், வியாபாரியிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை வாங்கினார். பணத்துடன் பெங்களூரு வழியாக தமிழகத்துக்கு நேற்று முன்தினம் காரில் புறப்பட்டார். பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே உள்ள மாதவரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.அப்போது மற்றொரு காரில் வந்த எட்டு பேர் கும்பல், காரை வழிமறித்தனர். அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களை காண்பித்து ஒரு கோடி ரூபாயுடன், காரையும் கடத்தி சென்றனர். மாத நாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஜோசப் புகார் செய்தார்.
Advertisement