தமிழ் என்று சொன்னாலே உத்வேகம் பிறக்கிறது என்றும் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை திமுக காப்பாற்றும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தங்கை மகனின் திருமணம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் என்று சொன்னாலே உத்வேகம் பிறக்கிறது எனக் கூறினார். மேலும், உள்ளூர் தமிழனாக இருந்தாலும் உக்ரைனில் உள்ள தமிழனாக இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக எனவும் பேசினார்.
இதையும் படிக்க: ‘பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்குக’ – வைகோSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM