கடந்த 11-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர் ஆகியோர் நடித்துள்ளனர். 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநில அரசு இந்த படத்திற்கு 100 சதவீத வரி விலக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
Movie #TheKashmirFiles is heart-wrenching narration of the pain, suffering, struggle, and trauma faced by Kashmiri Hindus in the 90s.
This needs to be watched by maximum people, hence we have decided to make it a tax-free in the state of Madhya Pradesh.
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 13, 2022
இதனை அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். “90-களில் காஷ்மீரை சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தை பெருவாரியான மக்கள் பார்க்க வேண்டும். அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இதற்கு வரிவிலக்கு கொடுத்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹரியானா மற்றும் குஜராத் மாநில அரசுகள் இந்த படத்திற்கு வரி விலக்கை அறிவித்திருந்தன.