தோனியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இருந்தபோதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அணியை தொடர்ந்து வழிநடத்தி வருகிறார் தோனி.
விரைவில் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாள் வலை பயிற்சி முடிந்து வீரர்கள் உடைமாற்றும் அறையில் நெட் பவுலர் ஒருவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் தல தோனி பங்கேற்று கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தோனி உடல் கட்டமைப்பு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இளம் வயது போல் இருந்தார்.
இதனையடுத்து 40 வயதிலும் வேற லெவலில் தோனி இளைஞன் போல இருக்கிறாரே என்று ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவரின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.