உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனாதிபதி புடினிடம் கெஞ்சியுள்ளார்.
உக்ரைன் படையெடுப்பில் ஏற்கனவே நாம் தோற்றுவிட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் உயிர்ப்பலி வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞாயிறன்று உக்ரைன் துருப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார் Lieutenant Colonel Maxim Krishtop.
ஆனால், உக்ரைன் மீதான புடினின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு Krishtop மன்னிப்புக் கோரியதுடன், உக்ரைன் மக்கள் மீது குண்டு வீசியது வாழ்க்கையில் தாம் செய்த மிகப்பெரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.
கீவ் நகரை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்டு, போரை நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கீவ் போன்றதொரு மிகப்பெரிய நகரை கைப்பற்றுவது என்பது இரு தரப்புக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் எனவும், ஒரு கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை புடின் கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ள Krishtop, போரை நிறுத்துக, பொதுமக்களை கொல்வதையும் நிறுத்துங்கள், ஏற்கனவே நாம் போரில் தோற்றுவிட்டோம் என்பது உங்களுக்கே தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்தே, அந்த நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் பணிகளை ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டு முன்னெடுத்து வந்துள்ளது.
இதனிடையே, கிழக்கு நகரமான மைக்கோவைல் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் புடினின் படைகள் தற்போது மேற்கில் ஒடெசாவை நோக்கிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.