கொழும்பு பல்கலைக்கழக வேந்தர், நாராஹேன்பிட அபயாராமாதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தலைமை தேரரின் தாயாரான பொடி மெனிக்கே அம்மையாரை நினைவுகூர்ந்து நேற்று (12) அபயாராம விகாரையில் இடம்பெற்ற பிக்குமாருக்கு காணிக்கை செலுத்தும் (சங்ககத தக்ஷினாவ) நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கலந்துக் கொண்டார்.
சங்ககத தக்ஷினாவ நிகழ்வின் நிறைவில் பங்கேற்றிருந்த மஹா சங்கத்தினருக்கு அடபிரிகர கொடுக்கப்பட்டதுடன், கௌரவ பிரதமரினால் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய திவில்கும்புரே விமலதம்ம தேரருக்கு அடபிரிகர வழங்கப்பட்டது.
பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தலைமை தேரர், கொழும்பு மாளிகாகந்த வித்;யோதய பிரிவெனாதிபதி தர்ஷனபதி வணக்கத்திற்குரிய பலங்கொட சோபித தலைமை தேரர், ஸ்ரீலங்கா ராமக்ஞா மஹா நிகாயவின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய நெதகமுவே விஜயமைத்திரி அனுநாயக்க தேரர், ரஜரட பல்கலைக்கழக வேந்தர் மிரிசவெடியே ரஜமஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், நாராஹேன்பிட அபயாராமாதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தலைமை தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்காக பிரித் பாராயணம் செய்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ருக், இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட தூதுவப் பிரதிநிதிகள், நாராஹேன்பிட அபயாராம விகாரையின் அறங்காவல் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு
Geethanath Kassilingam
COORDINATING SECRETARY
THE PRIME MINISTERS OFFICE
Phone: +94112354818
Mobile: + 94777777314