நடிகர்
தனுஷ்
நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம்
மாறன்
. இப்படத்தில்
மாளவிகா மோஹனன்
நாயகியாக நடிக்க
ஜி.வி.பிரகாஷ்
இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில் இப்படம்
OTT
யில் வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது. தனுஷின் படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாவது அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
என்ன நான் ஐஸ்வர்யாவுடன் இணைகிறேனா? விளக்கம் அளித்த சிம்பு..!
மேலும் தற்போது பல படங்கள் திரையரங்கில் தான் வெளியிடுவோம் என அப்படக்குழு காத்திருக்கும் வேளையில் தனுஷ் போன்ற முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாவது சற்று ஆச்சரியமாகவே உள்ளது.
இது ஒருபுறமிருக்க கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியான மாறன் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. வடசென்னை, அசுரன் போன்ற படங்களை தேர்ந்தெடுத்த தனுஷ் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்றும், துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் படமா இது எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனுஷ்
இந்நிலையில் இப்படத்தை பார்த்த தனுஷ் திரையில் இப்படம் வெளியானால் கண்டிப்பாக வெற்றியடையாது என எண்ணியே மாறன் படத்தை OTT யில் வெளியிட தயாரிப்பாளருக்கு சிபாரிசு செய்தார் என்ற தகவலும் பரவின. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனுஷிற்கும் ,இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் பிரச்சனை இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் வேளையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, ரைட்டு உண்மையைஅப்புறம் சொல்லுறேன் என கூறியிருந்தார்.
கார்த்திக் நரேன்
இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் எதை சொல்லப்போகிறார். ஒருவேளை எதாவது பரபரப்பான செய்தியை சொல்லபோகின்றாரா, இல்லை சாதாரணமாக பதிவிட்டு இருக்கின்றாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!