பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங் கியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலின் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரத் திருவிழா. இத்திருவிழா திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று கொடியேற்றத் துடன் தொடங்கியது.
இதையொட்டி கொடி மண்ட பத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். கொடி மரத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிறக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம் மார்ச் 17-ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது. சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். மார்ச் 21-ம் தேதி திருவிழா நிறைவு பெறும்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் பழனிவேல், அடிவாரம் கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன் விஸ்ணு, சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.