டெல்லி: பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாட்டின் பாதுகாப்பு தயார்நிலை, உலகளாவிய சூழல் குறித்த மதிப்பாய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.