பாலா மனைவியின் குடும்ப பின்னணி..இதுவரை வெளிவராத தகவல்..!

இயக்குனர்
பாலா
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர். எப்படி நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதைப்போல ஒரு சில இயக்குனர்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாலாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

வித்யாசமான கதைக்களங்களையும், காதாபாத்திரங்களையும் உருவாக்கி அதை மக்கள் மனதில் நிரந்தரமாக பதியச்செய்வதில் வல்லவர் இயக்குனர் பாலா.
சேது
,
பிதாமகன்
, அவன் இவன், பரதேசி, நான் கடவுள் ஆகியவை ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்க கூடிய படங்கள்.

விஜய் மாறியதற்கு இதுதான் காரணம் : எஸ்.ஏ.சந்திரசேகர்

இந்நிலையில் சமீபத்தில் பாலா மற்றும் அவரது மனைவி விவாகரத்து பெற்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக பிரிந்தனர்.

பாலா

இதற்கு பலரும் பல காரணங்கள் கூறிவருவதும், சமூகத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தற்போது பாலாவின் மனைவி குடும்ப பின்னணி பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பாலா

பாலாவின் மனைவி
முத்துமலர்
மதுரையை சேர்ந்தவர். மதுரையில் மிகவும் வசதியான குடும்பத்தின் ஒரே மகளான முத்துமலர் செல்லமாக வளர்க்கப்பட்டவராம். வீட்டில் அனைவரிடமும் கலகலப்பாக பேசுவதை வழக்கமாக வைத்துக்கொண்ட முத்துமலர் பாலாவின் அமைதியான யாரிடமும் பேசாத குணாதிசயம் அவருக்கு பிடிக்கவில்லையாம். எனவே இவர்களுக்குள் பிரச்சனை வர இதுவும் ஒரு காரணம் என சமூகத்தளங்களில் தகவல்கள் பரவிவருகிறது குறிப்பிடத்தக்கது.

தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.