இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரிக்காவிட்டாலும், சமீப வாரங்களாக இந்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் முன்னனி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் தனது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இந்த வட்டி விகிதம் எவ்வளவு அதிகரித்துள்ளது. இதனால் எந்த வகையான வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைக்கும்? என்று முதல் இந்த வட்டி அதிகரிப்பானது அமலுக்கு வந்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
என்னது 300% லாபமா..? ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கும் சர்ப்ரைஸ்
ரூ.2 கோடிக்கு மேலான FD வட்டி அதிகரிப்பு
முதல் கட்டமாக மிகப்பெரியளவில் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, 2 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 4.6% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும்.
எவ்வளவு வட்டி?
தற்போதைய நிலவரப்படி
7 நாள் முதல் 29 நாட்களுக்கு வட்டி விகிதம் – 2.50%
30 நாள் முதல் 60 நாள் வரையில் – 2.75%
61 நாள் முதல் 90 நாள் வரையில் – 3%
இதே 91 நாள் முதல் 184 நாட்கள் வரையில் – 3.35%
இதே 185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் – 3.60%
221 நாள் முதல் 270 நாள் வரையில் – 3.60%
271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் – 3.70%
290 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 3.70%
1 வருடத்திற்கு மேல் வட்டி எவ்வளவு?
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை – 4.15%
390 நாட்களுக்கு – 4.15%
15 மாதங்களுக்கு – 4.20%
18 மாதம் முதல் – 2 வருடம் வரையில் – 4.30%
2 வருடம் 1 நாள் முதல் – 3 வருடத்திற்குள் – 4.50%
3 வருடம் 1 நாள் முதல் – 5 வருடத்திற்குள் – 4.60%
5 வருடம் 1 நாள் முதல் – 10 வருடத்திற்குள் – 4.60%
மூத்த குடிமக்களுக்கும் இதே வட்டி விகிதம் தான் வழங்கப்படுகின்றது.
எப்போது முதல் அமல்
ஐசிஐசிஐ வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பானது மார்ச் 10, 2022ம் முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும் இந்த வட்டி விகிதம் 2 கோடி ரூபாய்க்கு மேலானவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் சாமானிய மக்களுக்கு பயன் இல்லை. ஏனெனில் 2 கோடி ரூபாய்க்குள்ளான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சில தினங்களுக்கு முன்பு தான் இதே போல நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 2 கோடி ரூபாய்க்கு மேலாக பிக்சட் டெபாசிட்டு 20 – 40 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்தது.
ICICI bank revises interest rates on these deposits: check latest rates here
ICICI bank revises interest rates on these deposits: check latest rates here/பிக்சட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. கொஞ்சம் இதையும் படித்திட்டு போங்க?