காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள த காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை எடுத்த குழுவினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் விகேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார். இவரது மனைவியும் நடிகையுமான பல்லவி ஜோஷி, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குநர், நடிகை பல்லவி ஜோஷி, தயாரிப்பாளர் அபிஷேக் ஆகியோர் பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது அக்குழுவை பிரதமர் மோடி பாராட்டினார்.
கடந்த 1990இல் காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தக் கதையை பின்னணியாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் சமீபத்தில் வெளியானது.
இருப்பினும், இதுவரை ரூ.3.55 கோடி வசூல் சாதனை செய்ததாகவும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்ஷய் குமாரின் பயோபிக்கை இயக்க விரும்பிய பிரபல நடிகை
நடிகர் அக்ஷய் குமார் பேட்மேன், 2.0, ஹேப்பி நியூஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
சிறந்த கதைகளை தேர்வு செய்வதுடன் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதிலும் திறமையானவர்.
இவரது படத்துக்கு மிகப் பெரிய பிஸினஸ் உள்ளது. இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர் என்பதால் இவரது படங்களை வெளியிட திரையரங்குகள் போட்டிபோடும்.
இந்நிலையில், இவரது நடிப்பில் பச்சான் பாண்டே படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது.
இந்தப் படம் தமிழில் ஜிகர்தண்டா என வெளியான படத்தின் ரீமேக் தான்.
பாபி சிம்ஹா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்ஷய். சித்தார்த் கதாபாத்திரத்தில் சிறு மாற்றம் செய்துள்ளது பாலிவுட் படக் குழு. சித்தார்த்துக்கு பதிலாக ஹீரோயின் கதாபாத்திரத்தை அக்குழு சேர்த்துள்ளது.
அந்தக் கதாபாத்திரத்தை நடிகை கீர்த்தி சனோன் ஏற்று நடித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அக்ஷய்-கீர்த்தி உள்ளிட் படக் குழு பங்கேற்றது.
அப்போது படத்தில் வருவது நிஜத்தில் ஒரு பிரபலத்தின் கதையை படமாக்க விரும்பினால் யாருடைய கதையை இயக்குவீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சற்றும் யோசிக்காமல் அக்ஷய் குமார் வாழ்க்கை கதையை இயக்குவேன் என்றார். அக்ஷய் குமார் அதற்கு பதிலளிக்கும் வகையில், ஆமாம். நான் அவரிடம் பேசினேன். அவர் கதையை தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று கூறினார் என்றார்.
பின்னர் கீர்த்தி சனோன் கூறுகையில், நாங்கள் முதலில் தயாரிப்பாளரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி முடித்தார்.
தனிமையைப் போக்க சிகிச்சை எடுத்தேன்: பாலிவுட் நடிகை
நடிகை ஷில்பா ஷெட்டி, ஷேப் ஆஃப் யூ என்ற சாட் ஷோவில் இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸை பேட்டி எடுத்தார்.
அப்போது அவர் உடல்நலம், ஃபிட்னஸ் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு ஜாக்குலின் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கொரோனா பரவலை அடுத்து முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தபோது நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என்று ஷில்பா ஷெட்டியிடம் தெரிவித்தார்.
பிரபுதேவாவின் புதிய படம்!
நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் திரைப்படம் ‘ரேக்ளாா’ . இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குனர் அன்பு இயக்குகிறார்.
ஜிப்ரான் இசையமைக்கிறார் . இந்நிலையில் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் தொடங்கி வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil