லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், உத்தர பிரதேசத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை குறித்து ஆலோசிக்க உள்ளார்
தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழா தேதி குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
யோகி தலைமையிலான அமைச்சரவையில் புதிய துணை முதல்வருடன், பல புதிய முகங்களையும் சேர்ப்பது குறித்து பாஜக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் ரத்தன் தேவ் சிங், அமைச்சர் சுனில் பன்சால், மாநிலப் பொறுப்பாளர் ராதா மோகன் சிங் ஆகியோரும் யோகி ஆதித்யநாத்துடன் டெல்லி செல்கின்றனர்.
உத்தர பிரதேச பாஜக தனது அமைச்சரவையில் அனைத்து சாதியினருக்கும் இடம் அளிக்க முடிவு செய்துள்ளதால், தகுதி அடிப்படையில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து முதல் கட்ட பட்டியலை தயாரித்துள்ளது என ஊகிக்கப் படுகிறது.
இந்த பட்டியல் குறித்து பாஜக தேசிய தலைமை இன்று இறுதி முடிவு எடுக்கிறது.
இதையும் படியுங்கள்… மணிப்பூரில் பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு