புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுள் மற்றும் உக்ரைன் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 18வது நாளாக நீடிக்கிறது. தாக்குதல் துவங்கிய பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பல முறை பிரதமர் ஆலோசனை நடத்தினார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது. பின்னர் ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலால் உலகளவில் ஏற்பட்ட சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்களா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisement