புவனேஸ்வர்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய பெண்கள் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது.
இந்த நிலையில் புவனேஸ்வர் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா- ஜெர்மனி அணிகள் சந்தித்தன. வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை, நீடித்த நிலையில் அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. இதே மைதானத்தில் இவ்விரு அணிகளும் இன்று (மாலை 5 மணி) மீண்டும் மோத உள்ளன.