விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள்நீதிமன்றம் நடந்தது.விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நீதிபதி சந்திரன் வரவேற்றார். நீதிபதிகள் தேன்மொழி, செங்கமலச்செல்வன், சாந்தி,கோபிநாதன், பிரபா தாமஸ், அருண்குமார் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்சங்கத் தலைவர்கள் மாரிமுத்து, ஸ்ரீதர், நீலமேகவண்ணன், தமிழ்ச்செல்வன், அரசு வழக்கறிஞர்கள்நடராஜன், சுப்ரமணியன் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசியதாவது:மக்கள் நீதிமன்றத்தில் அனைவரின் கூட்டு முயற்சி மூலமே வழக்குகளுக்கு சமரச தீர்வுகாணப்படுகிறது. பெரும்பாலான சிவில் வழக்குகள் பின்னால் கிரிமினல் வழக்காகமாறிவிடுகிறது.நீதிமன்றத்தில் வழக்காளிகள், வழக்கு போடும் போது கட்டணம்பெறப்படுகிறது. ஆனால், மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளிகள் செலுத்தும் கட்டணம் திரும்பதரப்படுகிறது. அது மட்டுமின்றி, இங்கு கால விரயமும் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது.இந்த நீதிமன்றத்தில் தீர்வாகும் முடிவுக்கு மேல் முறையீடு கிடையாது.மோட்டார் வாகன விபத்துகளில் அதிகளவு மாணவர்கள், இளைஞர்கள் இறக்கின்றனர்.இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கண்டிப்பாக தலைக் கவசம் அணிவதோடு, லைசென்ஸ்பெற்றிருக்க வேண்டும்.வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூற வேண்டும்.இவ்வாறு நீதிபதி பூர்ணிமா பேசினார்.நீதிபதி விஜயகுமார் நன்றி கூறினார்.2,767 வழக்குகளுக்கு தீர்வுவங்கி வாராக் கடன் வழக்குகளில் 312 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 200 ரூபாய் வசூலானது. அதே போல் நிலுவையில் உள்ள பிற வழக்குகளில் 2,455 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு அதன் மூலம் 24 கோடியே 89 லட்சத்து 2,869 ரூபாய் வசூலானது.
Advertisement