நாட்டில் நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்புக்கு நிகராக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிடின் அல்லது டீசலுக்கு மானியம் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் லீற்றர் ஒன்றிற்கு 55 ரூபா அதிகரிப்பானது 45 சதவீத அதிகரிப்பாகும். பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணத்தில் 15 வீத அதிகரிப்பு தவிர்க்க முடியாதது.
கட்டணம் அதிகரிக்கப்படும் வரை பஸ்கள் சேவையில் ஈடுபட முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.