மரியுபோல்: உக்ரைன் நாட்டின் மரியுபோல் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் அமெரிக்க நிறுவன கட்டடம் நொறுங்கிய சேதமானது. இதன் புகைப்படங்கள் கூகுல் மேப்பில் தெளிவாக தெரிகின்றன.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோவ் குலேபா தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மரியுபோல் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஆனாலும் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே அந்த நகரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நகரம் கருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற அமெரிக்க தனியார் நிறுவனமான மேக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமைந்துள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்த நிறுவன கட்டடம் சுக்கு நூறாக இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் சில, கடலின் மேல் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டட இடிபாடு கூகுள் மேப்பில் தெளிவாகத் தெரிகிறது. தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மரியபோல் பகுதியில் உள்ள குடிமக்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர்.
Advertisement