நடிகர்
ரஜினி
என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் காந்த சக்தி பல ரசிகர்களை சுண்டி இழுத்தது. அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமான ரஜினி ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரே பல பேட்டிகளில் தனக்கு ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்கும் எண்ணம் இருந்ததில்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என நடித்துவந்த ரஜினியை அவரது நண்பர்
கமல்
ஹீரோவாக நடிக்க சொல்லி வற்புறுத்தினார். சரி தன் நண்பர் இவ்வளவு தூரம் சொல்கிறாரே ஹீரோவாக நடித்துப்பார்ப்போம் என்று முடிவெடுத்த ரஜினிக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
சூர்யாவிற்கு விஜய் மேல அப்படி என்ன கோபம் ? சூர்யாவின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!
அவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்களை ஈர்த்து வசூலில் சாதனை படைத்தது. அதன் பின் அவருக்கு கோடானகோடி ரசிகர்கள் உருவாகினார்கள். ஆனால் அவர் வில்லனாக நடிக்கும்போதே அவருக்கு ரசிகர் மன்றம் நிறுவியவர் தான்
முத்துமணி
.
ரஜினி
இன்று ரஜினிக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர் மன்றங்கள் உள்ளது. ஏன் ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் கூட ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றது. ஆனால் முதன்முதலில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் துவங்கியவர் தான் மதுரையை சேர்ந்த முத்துமணி.
முத்துமணி
இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த செய்தி ரஜினியை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. எனவே மறைந்த முத்துமணி குடும்பத்திற்கு ரஜினி போனில் ஆறுதல் கூறினார். மேலும் அவர் பிள்ளையின் படிப்பு செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.
இதையடுத்து கொரோனா சூழல் குறைந்ததும் தானே நேரில் வந்து பார்ப்பதாகவும் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார் ரஜினி. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் ரஜினியை வெகுவாக பாராட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!