மணிலா:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில்
லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் இது 6.4 ஆக பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது.
இந்த சக்தி வாயந்த் நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்…உக்ரைன் தலைநகரில் இருந்து இந்திய தூதரகம், போலந்துக்கு மாற்றம்