முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள்:| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தாமையா ஒன்றாக சேர்ந்து, அடுத்த தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா,” என காங்கிரசுக்கு, பா.ஜ., சவால் விடுத்துள்ளது.அறிக்கையில் பா.ஜ., நேற்று கூறியதாவது:’நாங்கள் ஏற்கனவே தேர்தலுக்கு தயார்’ என சித்தராமையா கூறியுள்ளார்.

‘காந்தி குடும்பம் இல்லாமல், காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்க முடியாது,’ என சிவகுமார் கூறியுள்ளார். அப்படியென்றால், சித்தராமையாவும், சிவகுமாரும் சேர்ந்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்கட்டும் பார்க்கலாம்.ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு, உண்மை புரியவில்லை. மாநில பா.ஜ.,வுக்கு புற்றுநோய் என விமர்சிக்கும் அவருக்கு, தன் முதுகுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. காங்கிரஸ் தற்போது இறுதி நாட்களை எண்ணுகிறது.கருத்து வேறுபாடு இருந்தால், காங்கிரஸ் அலுவலகத்திலேயே சமாதியாக்குங்கள் என, சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். கருத்து வேறுபாடுகளின் சமாதிகளை, காங்., அலுவலகத்தில் கிளறினால், மலையளவு பெரிதான சமாதி கிடைக்குமில்லையா.சித்தராமையா தொகுதியில், காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்த்தால், டி.வி., குளிர்ச்சாதன பெட்டி கொடுப்பதாக ஆசை காண்பிக்கின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்தால், மாநில காங்., செயலர் பதவி கொடுப்பதாக, சிவகுமார் கூறியுள்ளார். ஆசை வார்த்தைகள் மூலமாகவே, கட்சியை பலப்படுத்தும் அவலநிலை, காங்கிரசுக்கு வந்தது ஏன்.இளைஞர் காங்கிரசில், வெறும் 2,000 உறுப்பினர்களை சேர்த்ததாக, சிவகுமார் கோபப்பட்டுள்ளார். எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், மூழ்கும் காங்கிரசில் இணைய இளம் தலைமுறையினர், ஆர்வர் காண்பிக்கவில்லை. நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை என மீண்டும் நிரூபணமாகிஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.