கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவும் போட்டியிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு, பிஹாரில் உள்ள போச்சகன், சத்தீஸ்கரில் உள்ள கைராகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் மேற்கு வங்கத்தில், அசன்சோல் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றிருந்த பாபுல் சுப்ரியோ, அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். இதனால் அந்த தொகுதியை ராஜினாமா செய்தார்.
பலிகன்ஜ் தொகுதியில் வெற்றி பெற்ற, திரிணமுல் மூத்த தலைவர் சுபத்ரா முகர்ஜி காலமானார். இதனால், இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அசன்சோல் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சத்ருஹன் சின்ஹாவும், பலிகன்ஜ் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவும் போட்டியிடுகின்றர். இதனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.