உக்ரைன் ராணுவத்தில் இணைந்து சண்டையிடும் தமிழர் சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார்.
தற்போது 4ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை ராணுவ பிரிவில் இணைந் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறார்.
சிறு வயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக இந்திய ராணுவத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் அவர் சேர்க்கப்பட வில்லை.
அமெரிக்க தூதரகத்திலும் ராணுவ பணியில் சேர முயற்சித்து தோற்று போனார். இந்நிலையில் உக்ரைனின் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை இராணுவ படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாய்நிகேஷ் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்து இருப்பதை அந்நாடும் உறுதிபடுத்தியது. இந்நிலையில் சாய்நிகேஷ் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்து இருப்பதை அறிந்த மத்திய , மாநில உளவு பிரிவு அதிகாரிகள் இது குறித்து ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது உக்ரைனில் இருக்கும் சாய்நிகேஷ் பெற்றொரிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.
இந்தியா திரும்புமாறு அழைத்தும், நாடு திரும்பாமல் தொடர்ந்து உக்ரைன் துணை ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து இந்திய மாணவர்களுக்கும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இந்நிலையில் சாய்நிகேஷுடம் அவரது பெற்றோர் தொடர்ந்து பேசிய நிலையில் அவர் நாடு திரும்ப சம்மதம் தெரிவித்துள்ளார்.
சாய் நிகேஷின் பெற்றோர் கூறுகையில், சாய்நிகேஷ் தாய் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய தரப்பு அதிகாரிகளும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர் விரைவில் பாதுகாப்பாக நாடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.