உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை குறைந்தது பொதுமக்கள் 2,187 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில், இதுவரை குறைந்தது 2,187 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
மரியுபோல் மீது ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், நகரத்தில் குறைந்தது 22 குண்டுவெடிப்புகள் நடந்தன.
ரஷ்யப் படைகள் தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து குண்டு போட்டு வருகின்றன.
நகரை விட்டு வெளியேறும் பாதைகளை எதிரிநாட்டு படைகள் தடுத்து வருகின்றன.
12 நாட்களாக மக்கள் கடினமான சூழ்நிலையில் உள்ளனர். நகரத்தில் மின்சாரம், தண்ணீர் அல்லது வெப்பமூட்டும் வசதி இல்லை.
மொபைல் தொடர்பு இல்லை. உணவு மற்றும் தண்ணீரின் கடைசி இருப்புக்கள் தீர்ந்துவிட்டன என்று நகர கவுன்சில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.