ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட மகளிர்கான கட்டணமில்லாபேருந்தை கிராமமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.
திருவரை, முதலியார் புதுக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சாயல்குடியில் இருந்து மகளிர்கான கட்டணமில்லா பேருந்தை இயக்க வேண்டி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டே நாட்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தின் ஓட்டுனர்-நடத்துனர் ஆகியோருக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.