புதுடில்லி-தன் வீட்டில், 10 கோடி ரூபாய் மதிப்பு உள்ள ‘டைனிங் டேபிள்’ பயன்படுத்திய தாக எழுந்துள்ள குற்றச் சாட்டை, ‘பாரத்பே’ நிறுவனத்தின் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் மறுத்துள்ளார்
.’ஆன்லைன்’ பண பரிவர்த்தனை நிறுவனமான பாரத்பே நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்டதாக, அதன் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் குரோவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரது பங்குகள் முடக்கப்பட்டு உள்ளன.இதையடுத்து, நிறுவனத்தில் இருந்து அஷ்னீர் குரோவர் வெளியேறினார்.
இந்நிலையில், அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், 10 கோடி ரூபாய் மதிப்பு உள்ள டைனிங் டேபிள் பயன்படுத்தியதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியாயின.இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:இதைப் படிக்கும்போது சிரிப்பு தான் வருகிறது. சிலர் திட்டமிட்டு பொய் தகவலை பரப்புகின்றனர்.
அதை ஊடகங்களும் செய்தியாக வெளியிடுகின்றன.இவ்வளவு விலை உயர்ந்த டைனிங் டேபிள் வாங்குவதற்கு பதிலாக, 10 கோடி ரூபாயை தொழிலில் முதலீடு செய்திருப்பேன். அதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்திருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement