நடிகர்
விஜய்
என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். போட்டி மனப்பான்மை காரணமாக அஜித் ரசிகர்கள் விஜய்யை விமர்சித்தாலும் அவர்களும் விஜய்யின் படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் விஜய்யின் திரைப்பயணம் அவ்வளவு சுலபமானது இல்லை. இதை அவரே பலமுறை மேடைகளில் கூறியுள்ளார். என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள் தான் உள்ளது என பல மேடைகளில் விஜய் கூறியிருக்கின்றார்.
ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய ஆரி..மேடையிலேயே திட்டி தீர்த்தார் ..!
ஆனால் அதையும் தாண்டி தற்போது தன் விடாமுயற்சியினாலும், கடின உழைப்பாலும் இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளார். இந்நிலையில் திரையில் படபட வென வசனங்கள் பேசுவது, நடனத்தில் பட்டையை கிளப்புவது, துளளாக காமெடி செய்வது என இருக்கும் விஜய் திரைக்கு பின்னால் பரம சாது.
விஜய்
ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் அமைதியாகவே இருக்கும் விஜய் தன் நெருங்கிய ஒருசில நண்பர்களிடம் மட்டும் நன்கு பேசுவாராம். இயல்பாகவே அமைதியாக இருக்கும் விஜய் சிறு வயதில் மிகவும் குறும்புத்தனம் உடையவராக இருந்தாராம்.
இதை அவரின் தந்தை
எஸ்.ஏ.சந்திரசேகர்
பேட்டியில் கூறியிருக்கின்றார். தன் எட்டு வயது வரை விஜய் கலகலவென பேசுவதும் குறும்புத்தனம் உடையவருமாகத்தான் இருந்தார். ஆனால் அவரின் தங்கையின் மறைவிற்கு பிறகு விஜய் ஆளே மாறிவிட்டார்.
தங்கையின் மீது அதீத பாசம் கொண்ட விஜய் அவரின் மறைவிற்கு பிறகு மிகவும் சைலண்டாக மாறிவிட்டதாக அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும் தற்போது
SAC
யூடுப் சானலை ஆரம்பித்து தன் திரைப்பயணத்தை பற்றி சுவாரசியமான பல கருத்துக்களை கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Carக்கு Insurance இருக்கு.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி