இந்தியாவிற்கு சென்று ஹிந்தி மொழி கற்க விரும்பும் மாணவர்களுக்காக புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் மனிதவள அபிவிருத்தி அமைச்சு புலமைப் பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள், ஆக்ராவில் உள்ள கேந்த்ரீய ஹிந்தி சன்ஸ்தான் என்ற நிறுவனத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் ஹிந்தி கற்கை நெறியைத் தொடரலாம்.
ஜீசீஈ உயர்தரப் பரீட்சையில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகவோ, இலங்கையின் பல்கலைக்கழகமொன்று நடத்திய ஏதோவொரு ஹிந்தி கற்கைநெறியையோ படித்தவர்கள் புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்களை கேந்த்ரீய ஹிந்தி சன்ஸ்தான் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். முகவரி www.khsindia.org என்பதாகும். கண்டி, ரஜபிஹில்ல மாவத்தையில் உள்ள துணை இந்திய உயர் ஸ்தானிகராலயததில் இருந்தும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 081-2222652 என்பதாகும்.