மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கோபி (வயது 20) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அதனை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் இது குறித்து கேட்ட போது தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கோபி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.