ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை வழங்கியது சவுதி அரேபியா. இது அந்நாடு, 2021 ஆண்டு முழுவதும் நிறைவேற்றிய மரணதண்டனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவில் 2021 ஆம் ஆண்டு முழுவதும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
Saudi Arabia executes 81 people in one day for terror offences, reports AFP News Agency quoting state media
— ANI (@ANI) March 12, 2022
தண்டிக்கப்பட்டவர்கள் “ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா, ஹுதிகள் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன்” தொடர்புடையவர்கள் என்று அதிகாரப்பூர்வ சவூதி பிரஸ் ஏஜென்சி கூறியது, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், நாட்டின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்கள் மற்றும் ஆயுதங்களை நாட்டிற்கு கடத்த திட்டமிட்டனர்.
இதற்கிடையில், சிறையில் விடுவிக்கப்பட்ட பதிவர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ரைஃப் படாவிக்கு 10 ஆண்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பதிவர், தற்போது உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டின் அடையாளமாக மாறியுள்ளார்.
மேலும் படிக்க | சவுதி அரேபியாவில் மாற்றத்திற்கான விதை; மெக்காவில் பெண் பாதுகாவலர்
2012 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் “இஸ்லாமை அவமதித்த” குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த படாவிக்கு தற்போது 38 வயது. அவர் வெள்ளிக்கிழமையன்று விடுவிக்கப்பட்டார்.
தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், சனிக்கிழமை AFP இடம் கூறிய தகவல்கள் இவை: “ரயிஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதைத் தொடர்ந்து அதே காலத்திற்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பு உறுதியானது மற்றும் இறுதியானது. “
எனவே, அரச மன்னிப்பு வழங்கப்படாவிட்டால், அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு சவூதியை விட்டு வெளியேற முடியாது.
2014 ஆம் ஆண்டின் இறுதியில், படாவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 வாரங்களுக்கு, வாரத்திற்கு 50 கசையடிகளும் என தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தப்லிகி ஜமாத் மீது தடை விதித்தது சவுதி அரேபியா
சவூதி அரேபியாவின் ஜெட்டா சதுக்கத்தில் அவருக்கு நிறைவேற்றப்பட்ட முதல் கசையடி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதும் ஐக்கிய நாடுகள் சபையால் விமர்சிக்கப்பட்டது என்பதும் வரலாறு.
“கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்” என்ற உலகளாவிய கண்டனங்களைத் தொடர்ந்து, பொதுவெளியில் படாவிக்கு மீண்டும் கசையடி கொடுக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமையன்று, படாவி கனடாவில் தங்களுடைய மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் தனது மனைவி என்சாஃப் ஹைதருடன் தொலைபேசியில் பேசியதாக செய்தி ஊடகம் AFP தெரிவித்துள்ளது: “ராய்ஃப் என்னை அழைத்தார். அவர் சுதந்திரமாக இருக்கிறார்” என்று என்சாஃப் ஹைதர் தெரிவித்துள்ளார்.
சவூதி பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் படாவியின் விடுதலை உறுதிப்படுத்தப்பட்டாலும், அவரது விடுதலை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க | சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கை! ஏமனில் 70 பேர் பலி