Russia-Ukraine conflict: மரியுபோல் மீது கடும் தாக்குதல்! கீவ் அருகே மோதல் தொடர்கிறது

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் பதுங்கிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
 
ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கிய்வ் முழுவதும் வெடிகுண்டுகளை விதைக்க ஆசைப்படுகிறது என்ரும், நகரத்தை கைப்பற்ற அதன் குடியிருப்பாளர்களைக் கொல்ல வேண்டும் என்று சனிக்கிழமையன்று உக்ரைன் அதிபர் Zelenskyy தெரிவித்தார்.

“நம்மையெல்லாம் கொன்றால்தான் இங்கு வரமுடியும். அதுதான் அவர்களின் இலக்கு என்றால் வரட்டும்” என்றார்.

துறைமுக நகரமான மரியுபோல் உட்பட நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களிலும் வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்கின்றன. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் மரியுபோல் நகரின் மீது ஷெல்களைக் கொண்டு தாக்குகின்றன. குடியிருப்பாளர்கள், அங்குள்ள மசூதியிலும் வேறு இடங்களிலும் மறைந்துள்ளனர்.

மேலும் படிக்க | Ukraine Russia War: தண்ணீர் ஊற்றி வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் உக்ரைன் வீடியோ!

உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை கொண்டு வருவதிலும், சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதிலும் மாரியுபோல் நகரம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. 

நகரை ரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட போது, ​​1,500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களினால், எண்ணிக்கையின்றி செத்து மடியும் மக்களை ஒன்றாகவே  வெகுஜன புதைகுழிகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர்.

ஆனால் தொடர் தாக்குதலால், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தடாலடியாக நுழைந்த ரஷ்ய வீரர்கள்! விரட்டி அடித்த உக்ரைன் ஜோடி

காணொளி வாயிலாக பேசிய ​​உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “அவர்கள் 24 மணி நேரமும் மரியுபோல் மீது குண்டுவீசி, ஏவுகணைகளை ஏவுகிறார்கள். இது அவர்களின் அளவற்ற வெறுப்பைக் காட்டுகிறது. ரஷ்யப் படையினர் குழந்தைகளைக் கொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

“எங்கள் பாதுகாப்பைக் கைவிட எங்களுக்கு உரிமை இல்லை, அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி,” என்று நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி உறுதியாக இருக்கிறார்.
கொத்துக் கொத்தாய் மனிதர்களை பலி வாங்கும் இந்த நாசகார தாக்குதல் எப்போது முடிவுக்கு வரும் என்று சர்வதேச சமூகம் காத்துக் கொண்டிருக்கிறது.

நேற்று (2022, மார்ச் 12 சனிக்கிழமை) போர்நிறுத்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. வேறொரு நகரத்தின் மேயர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

இர்பினில், மக்களின் சடலங்கள் தெருக்களிலும் பூங்காவிலும் திறந்த வெளியில் கிடந்தன.

மேலும் படிக்க | உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.